Cinema

மெழுகு சிலையான நடிகை தீபிகா படுகோனே

By  | 

பொலிவூட் நடிகை தீபிகா படுகோனேவின் மெழுகுச் சிலை லண்டன் மேடம் துஷாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுள்ளது.

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோருக்கு ஏற்கெனவே மெழுகு சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தீபிகா படுகோனே கடந்த ஆண்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ்வாக வந்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இது குறித்து தீபிகா கூறும்போது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது மெழுகுச் சிலை ஆக்கம் குறித்து நிபுணர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். இது ஒரு சிறப்பான அனுபவன். எனது சிலையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

சிறு வயதில் எனது பெற்றோருடன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு வந்திருக்கிறேன். ஆனால், இபோது எனது சிலையும் அங்கு வைக்கப்படவுள்ளது எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்றார்


தீபிகா படுகோனேவின் மெழுகுச் சிலை நடிகர் கணவர் ரன்வீர் சிங், பெற்றோர் பிரகாஷ் படுகோன், உஜ்ஜால படுகோன், மற்றும் ஜஜ்ஜீத் சிங் பவன்னி-அஞ்சூ பவன்னி மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று லண்டனின் மேடம் துஷோட்ஸில் அவரது மெழுகு சிலை திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *