Cookery

கீரை சோயா ஷமி கபாப் செய்முறை!

By  | 

தேவையானபொருட்கள்

  • மீல்மேக்கர் (சோயா சங்க்ஸ்) – ஒன்றரை கப்
  • சிறுகீரை – ஒரு கட்டு
  • மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
  • சீரகத்தூள் தலா – ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி – பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • கரம் மசாலாத்தூள் – தலா 2 தேக்கரண்டி
  • மல்லித்தூள் (தனியாத்தூள்) – தலா 2 தேக்கரண்டி
  • கடலை மாவு, மைதா மாவு – தலா கால் கப்
  • எண்ணெய், உப்பு, எலுமிச்சை சாறு – தேவையான அளவு.

மின்ட் சட்னி செய்ய: புதினா – ஒரு சிறிய கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – ஒன்று, உப்பு – 2 சிட்டிகை, தயிர் – ஒரு கப்.

செய்முறை

கொதிக்கும் நீரில் மீல்மேக்கர், உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து, தண்ணீரை வடித்துப் பிழிந்துவைக்கவும்.

கீரையைச் ஆய்ந்து சுத்தம் செய்யவும். கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயைக் காயவைத்து, கீரையைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் மீல்மேக்கர், இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி ஆறவிடவும்.

பின்னர் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதில் மைதா, கடலை மாவு சேர்த்துக் கலந்து, கட்லெட் போல தட்டவும். நான்-ஸ்டிக் பானில், கால் செ.மீ கனத்துக்கு எண்ணெய் ஊற்றி, கபாப்களைப் போட்டு, இருபக்கமும் பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

புதினாவையும் பச்சை மிளகாயையும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும்.

இதைத் தயிரில் கலந்து உப்பு சேர்த்தால் மின்ட் சட்னி தயார். கபாப்களை மின்ட் சட்னியோடு பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *