Life Style

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

By  | 

தற்போது உள்ள சூழலில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதோர் அரிது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில், ட்விட்டர் இருந்து விலகுவது கடினம், விளக்கவும் தேவையில்லை. ஆனால் பயன்படுத்தும் விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

முதலில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்கள் தேவையில்லாத செயல்களில் ஈடுபடும் எண்ணம் இருந்தால் அதை முதலில் தவிர்க்க வேண்டும். யாரையும் எளிதில் நம்புவதும் அபாயம்; முகம் தெரியாதவர்கள், முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் பேசுவதும் குற்றசெயல்களுக்கு வழிவகுக்கும்.

‘சந்தேகம் உங்களின் தற்காப்பு’

யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். சந்தேகம் கொள்வது உங்களை தற்காத்து கொள்ள உதவும்.எனவே முகம் தெரிந்த உங்களின் நம்பக வட்டத்தை மட்டும் சமூக வலைத்தளங்களில் வைத்துகொள்ளுங்கள். அந்த வரம்பை தாண்டும்போதுதான் பிரச்னைக்கு தூண்டுகோளாகிறது. ஏதேனும் பிரச்சினையில் பாதிக்கப்பட்டால் யாரேனும் மிரட்டும் பட்சத்தில் பயப்படாமல் இருக்கவேண்டும். அது அந்த கொடூரர்களை பலவீனமனமடைய செய்யும் முதல் உக்தி ஆகும்.

பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன?

பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர், முதலில் அவர்கள் செல்போனில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும். எதை அதிகம் பார்க்கிறார்கள், நட்பு வட்டாரம் குறித்து அறிந்துகொள்வது அவசியம். கூடா நட்பும் கேடாய் விளையும் என்பதை இளம்பெண்கள் உணரவேண்டும். எனவே, ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் கவனிக்கப்பட வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சரிசமமாக உட்கார்ந்து எதார்த்தங்களையும் உண்மைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். எது அபாயம், எதில் கவனமாக இருக்கவேண்டும் என்பது குறித்தும் அறிவுரைக்கவேண்டும். தெரியாத நபர் அணுகினால் என்ன செய்யவேண்டும் என அவர்களிடம் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு…

முக்கியமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் பெற்றோர் பக்கபலமாக இருக்கவேண்டியது அவசியம். அப்போது தான் அவர்களால் அதிலிருந்து மீண்டுவர இயலும். இந்த நேரத்தில் பெற்றோர்கள் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டியது மிகமிக அவசியம். அப்பெண்கள் மனநல மருத்துவரை அணுகுவதும் சரியாக இருக்கும்.

இந்த சம்பவம் வெளிவர காரணமாக இருந்த பெண்ணைதான் முதலில் பாராட்ட வேண்டும். துணிச்சலாக முன்வந்து வழக்கு தொடுத்தது பெரிதும் பாராட்டுக்குரியது. இதற்கு மேலான முழுமுதற் செயல், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் அத்தனையும் வெளிவராமல் ரகசியம் காக்கப்பட வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலியல் குறித்த பாடங்களும் அவசியமாக்கப்பட்ட வேண்டும்.

சட்டம்

எவ்வளவுதான் விழிப்புணர்வை மக்களிடத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் சட்டத்தில் உள்ள தற்காப்பு உரிமைகள் குறித்த விழிப்புணர்வு குறித்தும் பெண்கள் தெரிந்துகொள்வது அவசியமாகியுள்ளது.

நம் உடன்பாடு இன்றி பாலியல் ரீதியாக தாக்கும் போதும், இயற்கைக்கு மாறான முறையில் நம்மிடம் இச்சையை தீர்த்துக் கொள்ளும் நோக்கில் சீண்டும் போதும், நம்மை தாக்கி கொலை செய்ய முயற்சிக்கும் போதும், கடத்திச் செல்லும் நோக்கில் செயல்படும் போதும், சட்டப்பூர்வ அதிகாரிகளை அணுக முடியாத நிலையிலும், தற்காப்பு உரிமைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், நம்மை தற்காத்துக் கொள்ளும் போது, எதிரிக்கு எவ்விதமான அசம்பாவிதங்கள் நேர்ந்தாலும் அவை, குற்றமாக கருதப்படாது என்பன உள்ளிட்ட சில வரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை முக்கியத்துவமாக கருதவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *