Cookery

டபுள் கா மிட்டாய் செய்முறை

By  | 

தேவையானவை பொருட்கள்

  • பாண் துண்டுகள் -10
  • மில்க்மைட் – 1 டின்
  • குங்குமப்பூ – ஒரு கிராம்
  • பாதாம், பிஸ்தா, முந்திரி (சேர்த்து) – 50 கிராம்
  • சர்க்கரை – 200 கிராம்
  • பால் – ஒன்றரை லிட்டர்
  • சர்க்கரைப்பாகு – ஒரு கப்
  • ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
  • எண்ணெய் – அரை லிட்டர்.

செய்முறை
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, நன்கு சுண்டும் வரை காய்ச்சவும். அதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மில்க்மெய்டு ஊற்றி நன்கு கலக்கவும்.

குங்குமப்பூவையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பிரெட் ஸ்லைஸ்களை முக்கோண வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பாதாம், பிஸ்தா, முந்திரியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பாத்திரத்தில் பொரித்த பிரெட் ஸ்லைஸ்களை அடுக்கி அதன் மேல் முதலில் சர்க்கரைப்பாகை ஊற்றவும்.

பிறகு, பால் கலவையை ஊற்றவும். அதனை ஃப்ரிட்ஜில் வைத்து, செட் ஆனதும் மேலே பொடியாக நறுக்கிய முந்திரி, பாதம், பிஸ்தாவை தூவி, துண்டுகளாக்கி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *