Health

உங்கள் ஆரோக்கியத்தில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டால் உணவு விஷமாகி இருக்கலாம் – எச்சரிக்கை

By  | 

“ஐயம் இட்டு உண்” என்பது ஔவையார் மொழி, எனினும் தற்போது நாம் உண்ணும் உணவுகளின் பெயர் கூட எமக்கு சரியாக தெரிவதில்லை. அப்படி இருக்க உணவை பற்றிய சந்தேகங்களை எப்படி தீர்த்து கொள்ளமுடியும். நிறத்தையும் அலங்கரிப்பையும் பார்த்து விரும்பும் உணவுகளே அதிகம் அதன் ஆரோக்கயிம்பற்றிய கேள்வி உணவினால் நாமக்கு ஏற்படும் பாதிப்புகளின் போதோ சிந்திக்க தோன்றுகின்றது.
நாம் உட்கொள்ளும் உணவு நமக்கு ஒவ்வாமையையோ அல்லது விஷத்தன்மையையோ ஏற்படுத்தும் போது அதனை கண்டறிவதற்கும், சரியான முதலுதவியை பெற்று கொள்வதற்கும் நாம் தேவையான அறிவை பெற்றிருத்தல் வேண்டும். இதன் போது நமது உடல் வெளிபடுத்தும் சில அறிகுறிகளை இங்கு நோக்கலாம்.

வியர்த்தல்
நீங்கள் சாப்பிட்ட உணவு விஷ தன்மையானது என்பதை உணர்த்தும் முதல் அறிகுறி இதுதான். சாப்பிட்ட உடன் வளமைக்கு மாறாக உடலில் அதிக அளவில் வியர்த்து கொட்டினால் நிங்கள் சாப்பிட்ட உணவின் விஷ தன்மை உள்ளது.


குழப்ப நிலை
உணவு உண்டதன் பின்பு உடலில் சோர்வான, தளர்வான நிலையோ அல்லது மந்தமான, குழம்பிய நிலையோ ஏற்பட்டால் உணவு விஷமாக மாறியுள்ளது என்று அர்த்தம்.

அடி வயிற்று வலி
இது வெளிப்படையான ஒரு அறிகுறியாகும். விஷமாக மாற கூடிய உணவுகள் உடலில் சென்றதும் இந்த அறிகுறி உங்களுக்கு தென்பட ஆரம்பிக்கும். அதாவது, வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டு வயிற்றை இறுக்கமாக பிடித்து வைத்திருப்பது போன்ற உணர்வும் ஏற்படும்.
குளிர்ந்த நிலை
விஷ தன்மையுள்ள உணவுகளை சாப்பிட்ட சில மணி நேரங்களில் உடலின் தட்பவெப்ப நிலை குறைந்து விடும். குறிப்பாக உடல் முழுவதும் ஜில்லென்ற உணர்வு உருவாகும்.

வாந்தி
சாப்பிட்ட உணவு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளை வைத்து மிக சுலபமாக கண்டறியலாம். இவ் நிலை தொடருமாயின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை தர கூடும்.

தலை வலி
எந்த வித காரணமும் இல்லாமல் தலைவலி வந்தால், நீங்கள் விஷ தன்மையுள்ள உணவுகளை சாப்பிட்டுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ள இயலும்.

வயிற்று போக்கு
தொடர்ந்து வயிற்று போக்கு ஏற்பட்டால் உண்ட உணவு சரியாக செரிமானம் அடையாமல் அதன் பாதிப்பை அறிகுறியாக காட்டும்.

காய்ச்சல்
பசியின்மை, சோர்வு இது போன்ற அறிகுறிகளோடு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இது உணவு விஷமானதன் காரணமாக எற்பட்ட காய்ச்சலாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *