Children

டோனியை உற்சாகப்படுத்திய ஸிவா – வைரல் வீடியோ

By  | 

ஐ.பி.எல். போட்டியை டோனியின் மனைவி சாக்‌ஷி மற்றும் அவரது மகள் ஸிவா நேரில் கண்டுகளித்தனர். போட்டிக்கு இடையே ஸிவா தனது தந்தையை உற்சாகப்படுத்தினார். பார்வையாளர்கள் கலரியில் அமர்ந்திருந்த ஸிவா, “பப்பா.. கோ பப்பா…” என்று கோஷமிட்டார். இது அங்கிருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“ உங்கள் தந்தையின் பணியிடத்தில் அவரை உற்சாகப்படுத்துவதைவிட சிறந்தது வேறு எது” என்ற வாசகத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு, ஏராளமான லைக்ஸ் குவிகிறது. சமூக வலைதளத்திலும் இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *