Cinema

விருது விழாவில் நடைபெற்ற சஞ்சீவ் கார்த்திக் – ஆல்யா மானஸா நிச்சயதார்த்தம்

By  | 

தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்களின் மனங்கவர்ந்த ஜோடியான ராஜா ராணி சஞ்சீவ்- ஆல்யா மானசா இருவரும் இல்லற வாழ்வில் நுழைய இருக்கிறார்கள். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இந்த நிச்சயதார்த்த நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

விஜய் டிவியின் சின்னத்திரை விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
அப்போது இந்த விழாவிலேயே ஆல்யா மானஸா – சஞ்சீவ் கார்த்திக் ஜோடிக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம், மாலை மாற்றி தங்களது திருமணம் குறித்து முறைப்படி அறிவித்திருக்கிறார்கள்.

எதிர்பாராத இந்த நிகழ்வால் சஞ்சீவ் கார்த்திக் – ஆல்யா மானஸா ஜோடி ஆச்சரியத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

இந்நிலையில் இதை உறுதிப்படுத்தியிருக்கும் சஞ்சீவ் கார்த்திக், எதிர்பாராத தருணத்தைக் கொடுத்த பப்புக் குட்டிக்கு நன்றி. மேலும் சிறந்த நடிகைக்கான விருது வாங்கியது மகிழ்ச்சியளிக்கிறது’ பதிவிட்டுள்ளார்.

நடிகை ஆல்யா மானஸாவோ, ‘இரண்டுவிதமான எதிர்பாராத சந்தோஷத்தைக் கொடுத்ததற்கு நன்றி. சிறந்த நடிகைக்கான விருது வழங்கியதோடு, சஞ்சீவ் கார்த்திக்கை நிச்சயம் செய்துகொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஆல்யா மானஸா நடன கலைஞர் மானஸ் என்பவரைக் காதலித்து பின் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *