Cookery

வெயில் கால ரெசிபி: இளநீர் பாயாசம் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • இளநீர் – 1 கப்
  • இளநீர் வழுக்கை – 1 கப்
  • மில்க்மைட்- ½ கப்
  • பால் – 2 கப்
  • சர்க்கரை – ½ கப்
  • ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி
  • கஜு – ¼ கப் (நறுக்கியது)

செய்முறை

  • பாதியளவு இளநீர் வழுக்கையில் சிறிது இளநீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்
  • மீதமுள்ள இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் கன்டன்ஸ்ட் மில்க் ஊற்றி அதில் சர்க்கரை, பால் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும்
  • பால் பாதியாக குறையும் வரை சிம்மில் வைத்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
  • பால் பாதியாக சுண்டியதும் தீயை அணைத்து விட்டு அரைத்த இளநீர் விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • பின்பு மீதமுள்ள நறுக்கிய இளநீர் வழுக்கை, இளநீர், ஏலக்காய் தூள், நறுக்கிய நட்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்
  • பின்பு பிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து கூலாக பரிமாறவும்.
  • குளுகுளு இளநீர் பாயாசம் தயார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *