Cinema

இயற்கை அழகே அழகு என்று நம்பும் சாய்பல்லவி

By  | 

மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து இன்று பல ரசிகர்களின் ஆதரவை பெற்று இருப்பவர் சாய் பல்லவி.

தற்போது இவருக்கென்று தமிழ் மற்றும் மளையாளத்தில் தனி ரசிகர் பட்டாமே இருக்கிறது.

தமிழில், மாரி 2 படதில் நடித்து மேலும் கவனத்தை ஈர்த்துள்ளார். சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் மே 31ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,

‘நான் ஒருபோதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும் ஒருவருடைய அழகு மாறிவிடாது. மேக்கப் போட்டால் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என்று எனக்கு வேண்டியவர்கள் கூறுகிறார்கள். அதன் காரணமாக தான் மேக்கப் போடாமல் நடிக்கிறேன். அதை தான் இயக்குனர்களும் விரும்புகின்றனர்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *