Cinema

விதி மீறலினால் பறிப்போனது அழகி பட்டம்

By  | 


அழகிப் போட்டியின் விதிகளை மீறியமையால் 2018-ம் ஆண்டில் பெற்ற மிஸ் பொலிவியா யுனிவர்வர்ஸ் பட்டத்தை இழந்திருக்கிறார் 22 வயது மாடல் அழகி ஜாய்ஸ் ப்ராடோ.

பொலிவிய அழகிப் போட்டியில் பங்கு பெறுபவர்கள் திருமணம் செய்திருக்கக் கூடாது, கர்பமாக இருக்கக் கூடாது, இதற்கு முன் திருமணம் செய்து விவாகரத்து செய்திருக்கக் கூடாது, இதுவரை குழந்தை பெற்றிருக்க கூடாது என பல சட்ட திட்டங்களைச் சொல்லி இருக்கிறார்கள். மிக முக்கியமாக இந்த மிஸ் பொலிவியா அழகிப் பட்டத்தை, அடுத்த அழகி தட்டிச் செல்லும் வரை மேலே சொன்ன எந்த ஒரு விதிமுறைகளையும் மீறக் கூடாது. அப்படி மீறினால் பட்டத்தை பறித்து விடுவார்கள்.


ஜாய்ஸ் ப்ராடோ விதிமுறைகளை தெளிவாகவும் விரிவாகவும் படிக்கவில்லை போல. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலர் ராட்ரிக்ஸ் கிம்மென்ஸ் உடன் ஒரு குழந்தையின் ஆடையை கையில் வைத்துக் கொண்டு ஒரு போட்டோ பதிவேற்றி இருக்கிறார்.

குழந்தை பிறப்பு அதோடு அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்பதையும் அந்தப் பதிவிலேயே உறுதி செய்திருக்கிறார். “நாங்கள் எங்கள் வாழ்கையின் அழகான கட்டத்தை எட்டியுள்ளோம். இன்று உலகிலேயே மகிழ்ச்சியான பெண்ணாக இருக்கிறேன். என் அருகில் இருப்பவரால் என் வாழ்கை அன்பால் நிறைந்திருக்கிறது. நாங்கள் எங்கள் வாழ்கையின் மிக அழகான தருணங்களை வாழப் போகிறோம்”என உருக்கமாக சந்தோஷமாக பதிவிட்டிருந்தார்.


இவ்வாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே ஜாய்ஸ் ப்ராடோவின் மாடல் நிறுவனம் ஜாய்ஸ் ப்ராடோவுக்கு வழங்கப்பட்டிருந்த மிஸ் பொலிவியா அழகிப் பட்டம் திரும்பப் பெற்றுள்ளது. போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை மீறி கர்பமாக இருப்பதால், ஜாய்ஸ் ப்ராடோவிற்கு வழங்கிய பட்டம் பறிப்போனது.

இந்த செய்தி வெளியானதும் “பட்டம் வென்ற அழகிகள் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது, குழந்தைகளுக்கு தாயாகக் கூடாது. இதெல்லாம் முட்டாள் தனமான விதிகள். ஒர் அழகி தயாவதால் அவள் பொலீவிய அழகி பட்டத்துக்கு தகுதி குறைவானவளாகி விடுவாளா..? இது நியாயமில்லை” என கருத்துதெரிவிக்க தொடங்கிவிட்டார்கள் ட்விட்டர் வாசிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *