Cinema

பிக்பொஸ் தமிழ் ‘சீசன் 3 ‘ தொகுப்பாளர் யார்?

By  | 

பிரபலங்களுக்கு சின்னத்திரையில் மக்களின் மனதை, வெல்ல ஒரு பாலமாக அமைந்த நிகழச்சி பிக்பொஸ்.

இதன் காரணமாகேவே திரையுலகில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக தொகுப்பாளராக அறிமுகமானவர் உலகநாயகன் கமல்ஹாசன். முதல் சீசனில் தொகுப்பாளராக பட்டையைக் கிளப்பினார். இதனால் நடிப்பு மட்டுமின்றி இவருடைய தொகுப்பிற்கும் பல ரசிகர்கள் உருவாகினர்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் இவரே தொகுப்பாளராக இருந்தார். பிக்பொஸ் சீசன் 2 நிகழ்ச்சி, ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பின்றி இருந்தாலும், கமல்ஹாசன் வரும் இரண்டு நாட்களில் மட்டும் டி.ஆர்.பியை அள்ளியது.

இந்நிலையில் மூன்றாவது சீசனுக்காக தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்ள உள்ள பிரபலங்களிடம் நிகழ்ச்சியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஜூன் மாதம் பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் அரசியலில் கால் பதித்து விட்டதால், சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியையும் இவர்தான் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *