Cinema

இயக்குனர் ஷங்கரின் 25ஆவது ஆண்டு சினிமா கொண்டாட்டங்கள்

By  | 

இயக்குனர் ஷங்கரின் 25ஆவது ஆண்டு சினிமா பயணத்தை இயக்குனர்கள் பலரும் இணைந்து மிஷ்கினின் அலுவலகத்தில் கேக் வெட்டி உற்சாகமாக பாட்டு பாடி கொண்டாடியுள்ளனர்.

பிரமாண்ட இயக்குனராக திகழ்பவர் இயக்குனர் ஷங்கர். இவரது படைப்புகளில் வந்த ஐ, நண்பன், எந்திரன், 2.0 உள்பட பல படங்கள் மாஸ் ஹிட் படங்களாக அமைந்துள்ளன. இந்த நிலையில், ஷங்கர் இயக்குனராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் கடந்து 26ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இதனை சிறப்பிக்கும் வகையில், இயக்குனர் மிஷ்கின் பிரமாண்டமாக விழா நடத்த வேண்டும். இதில், இயக்குனர்கள் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அதன்படி, அவரது அலுவலத்திலேயே, மணிரத்னம், அட்லி, பாக்கியராஜ், வசந்தபாலன், பார்த்திபன், லிங்குசாமி, கௌதம் மேனன், பாண்டிராஜ், பாலாஜி சக்திவேல், மோகன் ராஜா என்று முன்னணி இயக்குனர்கள் பலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *