Beauty

முகத்திற்கு அழகு தரும் ஆப்பிள்

By  | 

ஆப்பிள் தயிர் மாஸ்க்

ஆப்பிளின் சதைப்பகுதியை மசித்து, தயிருடன் கலந்து முகத்தில் பூசவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இது அதிகப்படியான எண்ணையை உறிஞ்சுகிறது. முகப்பருக்கள் உண்டாவதை தடுக்கிறது.

ஆப்பிள் வாழைப்பழம் பேக்

இரண்டையிம் மசிந்து ஒன்றாக கலந்து சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி வாருங்கள். அற்புதமான ஸ்கின் டோனர் இந்த கலவை. உங்கள் சருமத்தில் ஜொலிப்பைத் தரும். மிருதுவாகவும், பளிச்சென்ற தோற்றத்தையும் தரும்.

ஆப்பிள் கிளசரின்

இந்த மழைக்காலத்தில் சருமம் வறண்டு போகும். அதற்கு இந்த கலவை வரப் பிரசாதம். ஆப்பிளை மசித்து அதனுடன் சில துளி கிளசரின் சேர்த்து முகத்தில் தடவி வாருங்கள். சருமத்தில் வறட்சி காணாமல் போய் மினுமினுக்கும்.

சன் ஸ்க்ரீன் லோஷன்

சருமத்தில் வெய்யிலில் ஏற்படும் கருமையை தடுக்கும் சுவராக ஆப்பிள் செயல் படும். ஆப்பிளில் சாறு எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவுங்கள். காய்ந்ததும் கழுவிவிடலாம். இவை புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றும். கருமையை அகற்றும்.

உடனடி ஜொலிப்பை பெற

ஆப்பிள்சாறு மற்றும் மாதுளைம்பழச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவுங்கள். காய்ந்தபின் கழுவினால் முகத்தில் அழகு மிளிரும்.

கரும்புள்ளிகள் மறைய

முகத்தில் கரும்புள்ளிகள், கருப்பு திட்டுக்கள் இருந்தால் அதற்கு எளிய தீர்வு இது. ஆப்பிளை மசித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து கலக்கி முகத்தில் பேக்காக போடுங்கள். ஒரு வாரத்திலேயே வித்தியாசம் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *