Cookery

உப்புமா பால்ஸ் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

ரவை உப்புமா- ஒரு கப்

  • தாளிக்க
  • நல்லெண்ணெய் அல்லது நெய் – ஒரு தேக்கரண்டி
  • கடுகு,சீரகம்,உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை,முந்திரி,வேர்க்கடலை -தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள்-சிறிதளவு
  • சாம்பார் பொடி-விருப்பப்பட்டால்
  • மிளகாய்த்தூள்-தேவைக்கு
  • உப்பு-தேவைக்கு
  • எலுமிச்சை-விருப்பப்பட்டால்
  • கொத்தமல்லி இலை-தேவைக்கு
  • முந்திரி,வேர்க்கடலை-விருப்பப்பட்டால்

செய்முறை

உப்மாவை உதிர்த்து சிறிய உருண்டையாக உருட்டி ஸ்டீமரில் 3 லிருந்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.

பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் அளவு ஊற்றி அத்துடன் கடுகு,சீரகம்,உளுத்தம் பருப்பு லேசாக வதக்கவும்.பின்னர் கறிவேப்பிலை,முந்திரி,வேர்க்கடலை சேர்த்து லேசாக வதக்கவும்.

பின்னர் மஞ்சள் தூள்,சாம்பார் பொடி (விருப்பப்பட்டால்)மிளகாய் தூள்,உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து லேசாக வதக்கவும்.

பின்னர் வேகவைத்த வைத்த உப்புமா உருண்டையை ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு தள்ளித் தள்ளிப் போடவும்.உடனே கரண்டி விடாமல் சட்டியை மட்டும் லேசாக குலுக்கவும்.

பின்பு மூடியை போட்டு மூன்றிலிருந்து ஐந்து நிமிடம் வரை வேகவிடவும்.பின்னர் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறு கொஞ்சம் பிழிந்து விடலாம்.

அட்டகாசமான உப்புமா பால்ஸ் தயார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *