Antharangam

அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: உறவு கசக்க காரணம் இதுவா?

By  | 

கேள்வி:நான் 37 வயது ஆண். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சுமார் பதின்மூன்று வருடங்களாக நான் மத்திய கிழக்கு நாடொன்றில் பணி­புரிந்து வந்தேன். நான்கு மாதங்களுக்கு முன் இலங்கையிலேயே வேலை பார்க்கும் எண்ணத்துடன் நாடு திரும்பிவிட்டேன். இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை.

எனது பிரச்சினை என் மனைவிதான்! பிள்ளைகள் பெரியவர்கள் என்பதால் அவரது விருப்பத்தின் பேரில் மூன்று வருடங்களுக்கு முன் இருந்து அவர் வேலை ஒன்றுக்குச் செல்ல ஆரம்­பித்தார். நன்றாக வேலை செய்த அவருக்கு பதவி உயர்வும் சம்பளமும் அதிகரித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவரிடம் நான் எந்தவித மாற்றத்தையும் உணரவில்லை.

ஆனால், இனி நான் வெளிநாட்டுக்குச் செல்லப்போவதில்லை என்றதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஆனால், நாளாக நாளாக, அவர் சொல்­வதை நான் கேட்க வேண்­டும் என்று அவர் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். வீட்டில் குப்பை கொட்டுவது, மலசல­கூடத்­தைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை நான்­தான் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்.

எவ்வளவு குப்பை­யாக இருந்தாலும் அதை அப்புறப்படுத்த அவர் முயற்­சிப்­பதே­ யில்லை. இவை வெறும் உதார­ணங்கள் மட்டுமே! இதுபோன்ற பல வித்தியாசங்களை அவரிடம் நான் உணர்கிறேன். இதற்கு என்ன காரணம்? இந்நிலையில் நான் என்ன செய்யவேண்டும்?

பதில்:வேலைதான் காரணம்! வெளி­நாட்டில் நீங்கள் வேலை பார்த்து வந்தபோது நீங்கள்தான் உங்கள் குடும்­பத்­தின் பொருளா­­தாரத் தேவை­களை நிறைவேற்றி­யிருப்பீர்கள். உங்களுக்கும் மனைவிக்கும் இடையில் தூரப் பிரிவு மட்டுமே இருந்திருக்கும். மற்றும்­படி குடும்பப் பொறுப்பை இருவரும் சமமாகப் பிரித்து ஏற்றுக்கொண்டிருந்தீர்கள். ஆனால், இப்போது…?தற்போதைய நிலையில் உங்களுக்கு வேலை இல்லை.

உங்கள் சேமிப்பில் இருந்து வருமானம் ஏதும் வரக்கூடும். ஆனால், உத்தியோகம் புருஷ இலட்­சணம். அந்த இலட்சணம் தற்போது உங்களிடம் இல்லை. இதுதான் உங்கள் மனைவியிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு முக்கியமான காரணம்!

பதின்மூன்று வருடங்கள் வெளி­நாட்டில் பணியாற்றிய உங்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது சரிதான்! ஆனால் அதற்காக, நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ – வேலை இன்றி வீட்டில் இருப்பது வரவேற்கத்க்கதல்ல! உங்களுக்கு ஒரு வேலையைத் தேடிக்கொண்ட பின் நீங்கள் வெளிநாட்டு வேலையைக் கைகழுவியிருக்கலாம்.

‘இத்தனை வருடங்களாக குடும்பத்­துக்காக ஓடி ஓடித் தேய்ந்து போன நான் கொஞ்ச நாள் ஓய்வெடுப்பதில் தவறு ஏதும் இல்லை’ என்ற எண்­ணம் உங்களுக்குள் ஏற்பட்டி­ருக்க­லாம். ஆனால், உங்கள் தரப்பில் இருந்து குடும்பத்தின் வருமானத்­திற்கு பங்களிப்பு ஏதும் இல்லாமல் போய்­விட்டதால், வேறு வழியில் குடும்பத்துக்கு நீங்கள் உழைக்க வேண்டும் என்று உங்கள் மனைவி எதிர்பார்க்கிறார்.

உண்மை என்ன­வென்றால், உங்கள் மனைவியின் இந்த எதிர்பார்ப்பில் தவறு ஏதும் இல்லை என்பதே!முதலில், உங்கள் மனைவி மூல­மாகக் கிடைக்கும் வருவாயைத் தவிர்த்து­விட்டு உங்கள் தனியொருவ­ரால் குடும்பத்தை நடத்திச் செல்ல முடியுமா என்பதை சிந்தியுங்கள். இல்லை எனும் பட்சத்தில், அவரை விட அதிகமான வருவாய் தரக்கூடிய வேலை ஒன்றுக்குச் செல்லவோ, தொழில் ஒன்றைச் செய்யவோ உங்களால் முடியுமா என்று பாருங்­கள்.

இந்த இரண்டில் எந்த ஒன்று நடந்தாலும் நீங்கள் உங்கள் குடும்­பத்தில் இழந்த மரியாதை உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.‘நான்தான் குடும்பத்தின் வரு­மானத்­துக்கு ஆணிவேராக இருக்கி­றேன். நான் சொல்வதைக் கேட்ப­தில் அவருக்கு என்ன பிரச்சினை?’ என்று உங்கள் மனைவி நினைக்கலாம்.

பொது­வாகப் பார்த்தால் ஆணோ, பெண்ணோ – யாராக இருந்தாலும் அதிக வருமானம் ஈட்டுபவரே குடும்பத்­தின் தலைமைத்துவத்தை வகிக்க விரும்புவார். அதுதான் உங்கள் மனைவியிடம் ஏற்பட்டுள்ள மாற்றம். இது பொது விதி. உங்கள் மனைவி அதற்கு விதிவிலக்கல்ல!

ஆனால், இங்கு மற்றொரு விடயத்­தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். உங்களை உங்கள் மனைவி எந்­தெந்த விதத்தில் கட்டுப்படுத்த முயற்சிக்­கி­றார் என்று சற்றுச் சீர்தூக்கிப் பாருங்கள்.அதாவது, வேலை எதுவுமின்றி இருக்கும் நீங்கள், நண்பர்களுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க விரும்பலாம்; அல்லது எந்த­வித வருமானத்தையும் ஈட்டித் தராத ஏதேனும் ஒரு வேலையை நண்பர்களுக்காகவோ, உறவினர்களுக்­காகவோ செய்துகொடுக்க நீங்கள் முன்வந்திருக்கலாம்.

இவை உதாரணங்கள் மட்டுமே! இதுபோல, குடும்பத்துக்கு எந்தவிதப் பயனும் தராத வேலைகளில் நீங்கள் ஈடுபட முயற்சிக்கும்போதே உங்களை உங்கள் மனைவி கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். இதிலும் தவறில்லை!உண்மையில் உங்கள் மனைவி மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உங்களுக்கு அன்பு இருந்தால், உங்­கள் கர்வத்தை – ஆண் என்ற கர்வத்தை – சற்று இறக்கி வையுங்கள். குறைந்த­பட்சம், உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும் வரையிலேனும் வீட்டு வேலை­களை – அது எதுவாக இருந்தா­லும் – விருப்பத்துடன் செய்யுங்கள்.

நீங்கள் செய்யும் வீட்டு வேலை­கள் உங்கள் குடும்பத்தினரின் நல­னுக்­கானவையே என்பதைப் புரிந்து­­கொள்ளுங்கள். அதை நீங்கள் விரும்­பாத பட்சத்தில், குறைந்த சம்பளமாக இருந்தாலும் உடனடி­யாக ஒரு வேலைக்குச் செல்ல ஆரம்பி­யுங்கள். உங்கள் மனைவியின் போக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *