Cinema

பிக்பொஸ் 3 சீசனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By  | 

நட்சத்திர நிகழ்ச்சியான பிக்பொஸ் 3வது சீசன் அடுத்த மாதம் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இரண்டு முறைகள் பிக்பொஸ் நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசனே, மூன்றாவது முறையாகவும் பிக்பொஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இதனை நேற்று வெளியிட்ட புரமோ வீடியோவின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த முறை பிக்பொஸ் நிகழ்ச்சி நடத்த கமலைத் தவிர வேறு யாரையும் சேனல் பரிசீலிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

இதற்கிடையில் கமல் தீவிர அரசியலில் இறங்கி இருப்பதாலும், சமீபத்தில் அவரின் இந்து தீவிரவாதம் பற்றிய சர்சை பேச்சால் ஏற்பட்டுள்ள நெருக்கடியாலும் கமல் பிக்பொஸ் நிகழ்ச்சியை நடத்தினால் சேனலுக்கு மறைமுக நெருக்கடிகள் கொடுக்கப்படும் என்றும், இதனால் சேனல் கொஞ்சம் தயக்கம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகின, என்றாலும் “அரசியல் சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் கமல்தான் பிக்பொஸ்” என்று சேனல் வட்டாரம் அடித்துச் சொல்கிறது.

இந்நிலையில் பிக்பொஸ் நிகழ்ச்சி ஜுன் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *