logo

Cookery

மீட்போல்ஸ் கோர்ன் டோக்ஸ் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • அரைத்த கோழி – 455 g
  • ப்ரட் கிரம்ஸ் – 25 g
  • முட்டை – 1
  • சீஸ் – 1/2 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகு – 1/2 கப்
  • சோஸ் – 1/4 கப்
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

பொரிக்க

  • கோர்ன் மீல்(corn meal) – 3/4 கப்
  • கோதுமை மா- 1 1/4 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • பேக்கிங் சோடா – 4 தேக்கரண்டி
  • மரக்கறிஎண்ணெய் – 1 1/4 கப்
  • ஸ்கிவர்ஸ் (skewers)

செய்முறை

பாத்திரம் ஒன்றில் அரைத்த கோழி ,ப்ரட் கிரம்ஸ்,முட்டை,துருவிய சீஸ்,உப்பு.மிளகு,சோஸ் சேர்த்து நன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்

பிசைந்த கலவையை உருண்டைகளாக உருட்டி மீட்போல்ஸ் செய்து கொள்ளவும்.

பாத்திரம் ஒன்றில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்கிய பின் 3 -4 நிமிடங்கள் உருண்டைகளை எல்லாப் பக்கங்களிலும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

பின்பு மற்றுமொரு பாத்திரத்தில் கோர்ன் மீல்,கோதுமை மா,உப்பு,சீனி,பேக்கிங் பௌடர் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.

பின்பு முட்டை,பால் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.

பொரித்த மீட்போல்ஸை ஸ்கிவர்ஸ் குச்சிகளில் லொலிபாப் பாணியில் வைக்கவும்.

கரைத்த மா கலவையில் மீட்பொல்ஸ்களை தோய்த்து எடுக்கவும்.

எண்ணெய்யை சூடாக்கி 3-4 நிமிடங்கள் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *