Cinema

டுவிட்டர் பக்கத்தை அசத்திய கீர்த்தி சுரேஷ்

By  | 

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் சாவித்ரியான கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை வைத்து அசத்தியுள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கியிருந்த மகாநடி சாவித்ரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ‘மகாநடி என்பதற்கு தெலுங்கில் மிகப்பெரிய நடிகை என அர்த்தம் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் துல்கர் சல்மான் அவருடைய கணவர் ஜெமினி கணேசனாக நடித்துள்ளார். மேலும், படத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படம், தெலுங்கில் மகாநடி என்ற டைட்டிலில் கடந்த 9ம் திகதி வெளியானது.

இந்த நிலையில் தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் நடிகையர் திலகம் என்ற டைடிலில் இன்று(11/05/2018) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில், படத்திற்காக முழுசாக சாவித்ரியாக மாறிய கீர்த்தி சுரேஷ் உலக முன்னணி நடிகையாக மக்கள் செல்வியாக மாறி சாவித்ரியைப் போன்று மக்களிடையே நீங்காத இடம் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *