Cookery

சீஸ் கேக் 5 நிமிடங்களில் செய்யலாம்!

By  | 

தேவையான பொருட்கள்

  • பட்டர் – 1 மேசைக்கரண்டி
  • கிறீம் கிரக்கர் பிஸ்கட் – 2
  • கிறீம் சீஸ் – 115
  • சீனி – 2 மேசைக்கரண்டி
  • வெண்ணிலா எசன்ஸ் – 3 துளிகள்

செய்முறை

பாத்திரம் ஒன்றில் பட்டரை போட்டு அவனில் வைத்து உருக்கி கொள்ளவும்.

உருக்கிய பட்டரை பாத்திரம் முழுவதும் பூசிக் கொள்ளவும்

மற்றொரு பாத்திரத்தில் மெலிபன் கிறீம் கிரக்கர் பிஸ்கட்டை தூளாக்கி கொள்ளவும்.

தூளாக்கிய பிஸ்கட்டை பட்டர் பூசிய பாத்திரத்தில் போடவும்.

பாத்திரம் ஒன்றில் கிறீம் சீஸ் ,சீனி,வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸ் பண்ணிக்கொள்ளவும்.

சீஸ் கலவையை எடுத்து பிஸ்கட் தூள் பாத்திரத்தில் இடவும்.

பின்பு தயாராக இருக்கும் கேக் கலவையை அவனில் 4 நிமிடங்கள் 45 செக்கன்கள் வைத்து எடுக்கவும்.

அவனில் இருந்து எடுத்து தட்டு ஒன்றில் போட்டு 30 நிமிடங்கள் குளிரூட்டியில் வைக்கவும்.

சுவையான சீஸ் கேக் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *