Cinema

பிக்பொஸ் பிரபலம் மகத்தின் வருங்கால மனைவி வெளியிட்ட நிச்சயதார்த்த வீடியோ

By  | 

பிக்பொஸ் பிரபலம் மகத் ராகவேந்திராவின் வருங்கால மனைவி பிராச்சி மிஸ்ரா நிச்சயதார்த்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில்,காதலர்களான பிராச்சி மிஸ்ரா மற்றும் மகத் ராகவேந்திராவிற்கு பராம்பரிய முறையில் நிச்சயதார்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர்களுக்குள்
நடந்த மகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதவில் மகிழ்ச்சியான தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன் என பிராச்சி பதிவிட்டுள்ளார்.

வருங்கால மனைவி பகிந்த வீடியோவை சிறிது நேரத்தில் மகத் தமிழில் பகிர்ந்து இருந்தார்.

இவர்களின் நிச்சயதார்த்தம் இவ்வருடம் மாதம் ஏப்ரல் 17 ஆம் திகதி இடம் பெற்றது.

இந்நிலையில் மகத் ராகவேந்திரா மற்றும் பிரச்சி மிஸ்ராவின் திருமண திகதி குறித்த அறிவிப்பு அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மகத் மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் நடிகர் மகத் பிக்பொஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.

இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.

பிராச்சி பன்முகத்தன்மை திறமை கொண்டவர். இவர் மொடல் ,தொழிலதிபர், முதலீட்டு ஆலோசகர் மற்றும் நடிகையும் ஆவார். அதுமட்டுமல்லாமல் 2012ல் மிஸ் இந்தியா எர்த் பட்டம் வென்றவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *