Cinema

பிக்பொஸ் தமிழ் சீசன் 3 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றமா?

By  | 

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பொஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், விரைவில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

வரும் 23ஆம் திகதி முதல் நிகழ்ச்சி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வழக்கம் போல் நடிகர் கமல் ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

15 பிரபலங்கள் சேர்ந்து, ஒரே வீட்டில் 100 நாட்கள் வசிப்பார்கள். இவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதியில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இதில் பொதுமக்களின் வாக்குகளும் முக்கிய பங்காற்றுகின்றன.

கடந்த இரு சீசன்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் இம்முறை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தனியார் தொலைக்காட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *