Cookery

துவரம்பருப்பு இட்லி உப்புமா செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • இட்லி அரிசி – 1 கப்,
  • துவரம்பருப்பு – 1 கப்,
  • உப்பு – தேவைக்கு,
  • சோடா உப்பு – 1 சிட்டிகை,
  • மோர் மிளகாய் – 3,
  • காய்ந்தமிளகாய் – 3.

தாளிக்க…

  • எண்ணெய் – தேவைக்கு,
  • கடுகு – 1 தேக்கரண்டி,
  • கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி,
  • உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை – 1 கொத்து.

செய்முறை

  • இட்லி அரிசியையும், துவரம்பருப்பையும் 4 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கொரகொரப்பாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து 8 மணி நேரம் வரை புளிக்க வைத்து சோடா உப்பு சேர்த்து கலக்கவும்.
  • இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து, மாவை ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.
  • இட்லிகள் நன்கு ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெயை காயவைத்து மோர் மிளகாய், காய்ந்தமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆறியதும் கொரகொரப்பாக கையால் பொடித்து கொள்ளவும்.
  • பிறகு அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதி வந்ததும் உதிர்த்த இட்லிகளை சேர்க்கவும். இட்லி உதிரியாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
  • கடைசியாக இறக்கும் போது கொரகொரப்பாக பொடித்த மோர் மிளகாய், காய்ந்தமிளகாயை போட்டு கிளறி பரிமாறவும்.
  • சூப்பரான சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *