Cinema

நடிகை ரஜினாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?

By  | 

நடிகை ரெஜினா நிச்சயதார்த்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஜினா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் இவர் சமீபத்தில் பொலிவூட்டிலும் கால் பதித்து, முதல் படத்திலேயே ஓரினச்சேர்க்கையாளராக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது, தமிழில் கசட தபற, தெலுங்கில் எவரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரெஜினாவிற்கு சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகர் ஒருவர் உடன் சென்னையில் இரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், தன் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்தாண்டு இறுதியில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்தி பரவி உள்ளது.

இதுப்பற்றி ரெஜினா தரப்பில் விசாரித்தபோது, முற்றிலுமாக மறுத்துள்ளார். “எங்கிருந்து இதுபோன்ற செய்தி பரவுகிறது என்றே தெரியவில்லை. இதுமாதிரியான செய்தி எரிச்சல் அடைய வைக்கிறது. திருமணம் செய்யும்போது நானே அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *