Cinema

இசை அமைப்பாளராகும் சித்ஸ்ரீராம்

By  | 

பாடகர் சித் ஸ்ரீராம், மணிரத்னம் தயாரிக்கும் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தமிழில், தள்ளிப்போகாதே.., மறுவார்த்தை பேசாதே, குரும்பா, என்னடி மாயாவி நீ, கண்ணான கண்ணே… உட்பட ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருப்பவர் சித் ஸ்ரீராம். பாடகராக இருக்கும் இவர், இப்போது இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

மணிரத்னம் கதை, திரைக்கதையில் அவர் உதவியாளர் தனசேகரன் இயக்கும் படம், ‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, மடோனா நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா உள்பட பலர் நடிக்கின்றனர். இதற்கு ’96’ படத்துக்கு இசை அமைத்த கோவிந்த் வசந்தா இசையமைப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பாடகர் சித் ஸ்ரீராம் இசை அமைப் பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *