Cookery

வெந்தைய குழம்பு செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • சுண்டைக்காய் வற்றல் – 3 தேக்கரண்டி,
  • சின்ன வெங்காயம் – 15,
  • தனியா – 1 தேக்கரண்டி,
  • காய்ந்த மிளகாய் – 7
  • வெந்தயம் – 3 தேக்கரண்டி,
  • புளி – ஒரு எலுமிச்சை அளவு,
  • கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி,
  • பெரிய தக்காளி – 1,
  • நல்லெண்ணெய் – 6 தேக்கரண்டி,
  • மிளகு – 1/2 தேக்கரண்டி,
  • உப்பு – தேவையான அளவு,
  • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
  • பெரிய தக்காளி – 1,
  • வெல்லம் – சிறிது,
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து.

அரைத்து வைக்க
கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை
கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.

இத்துடன் சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் நன்றாகக் குழைய வதக்கவும்.

அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.

சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான வெந்தயக்குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *