
Cookery
காளான் மசாலா தோசை செய்முறை!
By
|
தேவையான பொருட்கள்
தோசை செய்ய
- அரிசி – 1 1/2 கப்
- கைகுத்தல் அரிசி சாதம் 1 1/2 கப்
- கறுப்பு உளுந்து 3/4 கப்
- வெந்தயம் 1/4 தேக்கரண்டி
- உப்புத்தூள் தேவையான அளவு
காளான் மசாலா செய்ய
- காளான் 1 பாக்கேட் ( பொடியாக நறுக்கியது)
- வெங்காயம் 1 ( பொடியாக நறுக்கியது)
- தக்காளி 2 ( பொடியாக நறுக்கியது)
- இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
- வரமிளகாய் தூள் 1 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் 3/4 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலைகள் 2 மேஜைக்கரண்டி
- சோம்பு 1/4 தேக்கரண்டி
- சமையல் மரசெக்கு கடலெண்ணய் 2 மேஜைக்கரண்டி
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- காட்டுயானம் அரிசி மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்து 5 மணிநேரம் ஊற வைக்கவும்.
- கறுப்பு உளுந்தையும் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
- கிரைண்டரில் காட்டுயானம் அரிசி , வெந்தயம், கைகுத்தல் அரிசி சாதம் மற்றும் கறுப்பு உளுந்தையும் சேர்த்து நன்றாக சிறிது உப்பு தூள் சேர்த்து அரைக்கவும்.
- இப்பொழுது வடைச்சட்டியில் சமையல் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பை போட்டு நன்றாக வதக்கவும்.
- அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாகபொன்னிறமாக வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.
- பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் வரமிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூளை சேர்த்து நன்றாக இந்த கலவை கூழ் போல் ஆகும் வரை வதக்கவும்.
- பிறகு நன்றாக பொடியாக நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் கரம்மசாலா தூளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- அதில் 3/4 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு மசாலா நன்றாக வெந்ததும் , அதில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
- தோசை மாவை கொண்டு தோசையை தோசை கல்லில் வார்த்து , அதன் மேல் ஒரு மேஜைக்கரண்டி சமையல் கடலெண்ணய் ஊற்றி தோசை வெந்ததும் அதில் காளான் மசாலாவை நடுவில் வைத்து. தோசையை மூடி , நன்கு மடித்து அதன் மேல் ஒரு தேக்கரண்டி பசு நெய் விட்டு நல்ல தோசை முறுகலானதும் எடுத்து பரிமாறவும்.
0 comments