Cookery

வெண்டைக்காய் 65 செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • இஞ்சி – 1/2 துண்டு
  • பூண்டு – 6-7 பற்கள்
  • பச்சை மிளகாய் – 4-5
  • வெண்டைக்காய் – 250 கிராம்
  • கடலைமாவு – 1/4 கப்
  • அரிசி மாவு – 1/4 கப்
  • மிளகாய் தூள் – 11/2 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

மிக்ஸியில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

ஒரு பௌலில் நறுக்கிய வெண்டைக்காயில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், அரைத்த இஞ்சி பூண்டு விழுது, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின் அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ளதை பொரித்தெடுக்கவும்.

பின் சிறிதளவு கடலை, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும். பின் பொரித்தவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ளவும். அதன்மேல் மாங்காய் தூள் மற்றும் மசாலா தூவி கொள்ளவும். இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *