Cinema

பிக்பொஸ் கவின் தாய்க்கு 5 ஆண்டு சிறை

By  | 

பிக்பொஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, கவினின் தாய்க்கு, சீட்டு கம்பெனி மோசடி வழக்கில், ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, கே.கே.நகர் பகுதியில் கவினின் தாய் உட்பட 5 பேர் சேர்ந்து, 1998 முதல், 2006ம் ஆண்டு வரை, அனுமதியின்றி, சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் சீட்டு கட்டிய பலருக்கு பணம் தரவில்லை. பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின்படி, பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் போதே, இரண்டு பேர் இறந்து விட்டனர். இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

மோசடியில் ஈடுபட்ட தமயந்தி, ராஜலட்சுமி, ராணி ஆகிய மூவருக்கும், தலா, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும், ஏமாற்றப்பட்ட, 29 பேருக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், உத்தரவிட்டார்.

இதில், ராஜலட்சுமி, பிக்பொஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, கவினின் தாய்.

மேலும் இவர், பொலிஸ் துறையில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *