Cookery

ரவா பணியாரம் செய்முறை!

By  | 

தேவையான பொருள்கள்

  • ரவா – 100 கிராம்
  • கோதுமை மா- 100 கிராம்
  • சீனி – 100 கிராம்
  • தேங்காய் துருவல் – 100 கிராம்
  • முந்திரிப்பருப்பு – 10
  • சிறிய வாழைப்பழம் – 1
  • நெய் – 50 மில்லி
  • எண்ணெய் – 50 மில்லி
  • ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – 1/4 தேக்கரண்டி

செய்முறை

தேங்காய் துருவலை 100 மில்லி அளவுக்கு பால் எடுத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பை மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.

வாழைப்பழத்தை மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ரவா, மைதா, சீனி முந்திரிப்பருப்பு தூள், மசித்து வைத்துள்ள வாழைப்பழம், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் தேங்காய் பாலும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

நெய், எண்ணெய் இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு நெய் கலவையை ஊற்றவும்.

சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் குழி கொள்ளும் அளவுக்கு மாவு ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.

மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்யவும். இந்த அளவுக்கு 21 பணியாரங்கள் வரும். சுவையான ரவா பணியாரம் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *