Cinema

பிக்பொஸ் போட்டியாளர்களுக்கு கமல் எழுதிய கவிதைகள்

By  | 

பிக்பொஸ் சீசன் 3 வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முகேன் 7 கோடியே 64 லட்சம் வாக்குகளை பெற்றதாகவும், சாண்டி 5 கோடியே 83 லட்சம் வாக்குகளை பெற்றதாகவும் கமல் அறிவித்தார். அடுத்த இரு இடங்களில் லொஸ்லியாவும், ஷெரீனும் பிடித்தனர்.

கமல் எழுதிய கவிதைகள்

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல் ஹாசன், அவர் கைப்பட எழுதிய கவிதை கடிதத்தை லொஸ்லியா, முகேன், சாண்டி மற்றும் ஷெரீனுக்கு வழங்கினார்.

சாண்டி குறித்து கமல் எழுதிய கடிதத்தில் , “உள்ள போறப்ப மாஸ்டர் சாண்டி…இப்ப நீட்டா போயிட்டப் பார் அதையும் தாண்டி, 105 நாளா நீ கத்துனது எல்லாம்… இன்னும் நல்லவனா உன்னை மாத்திடும் பாரு… சென்னைநாயக்கர் பட்டணம் இல்லை இந்த செந்தமிழ் நாடே இதை நம்புது பார்…” என்று குறிப்பிட்டு இருந்தார்.

“நண்பர்கள் கொஞ்சமாய் குறைத்த பெயர் கொண்ட லியா, வெளி உலகம் வியக்குது உன்னை விளங்கு ‘லியா’?… பெருகிவரும் ஆதரவும் புரிய ‘லியா’? புகழ் மழையில் நனைந்திட நீ துடிக்க ‘லியா’? சிகரம் தொட நீ ரெடியா லாஸ் ‘லியா’?” என்ற கவிதையை எழுதி லொஸ்லியாவுக்கு பரிசளித்தார்.

ஷெரீன் குறித்து ஆங்கிலத்தில் கவிதை எழுதி இருந்தார் கமல்.

அதில், “Blinded or Blind folded you never loss kindness or yourself. What you lost is few pounds you brought in to this house. What you gained is you will be happily counting on the way to success and your bank” என்று எழுதி இருந்தார்.

“பாட்டுக்கு பாட்டெடுத்து நீ பாடுவதைக் கேட்டிடவே உன் நாட்டிலும் ஆள் இருக்கு என் நாட்டிலுமே ஆள் இருக்கு வந்தவரை வாழ வைக்கும் பல சான்றுகளும் இங்கு இருக்கு மற்றதெல்லாம் நினையாம நல்லா பணிவுடனே வெற்றி தொடு” என்று முகேன் குறித்து எழுதி இருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *