Health

உடற்பயிறற்சிக்கு பின் இந்த பானங்களைப் பருகினால் ஆபத்து!

By  | 

நாம் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் போது, உடலில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறுவதால், அதிகமாக  தாகம் ஏற்படுகின்றது. இதன்போது அடிக்கடி சிறிது நீரைப் பருகலாம். ஆனால் உடற்பயிற்சி செய்து முடித்த பின், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். இதனால் உடற்பயிற்சியால் பாதிக்கப்பட்ட தசைகள் சரியாவதோடு, உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, தசைகளும் நன்கு வளர்ச்சி பெறும். இதனை தவிர்த்து நாம் அருந்தும் சில பானங்கள் உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன. அவற்றில் சில..

உடற்பயிற்சி பின் தவிர்க்க வேண்டிய பானங்கள்!

ஸ்போர்ட்ஸ் பானங்கள்

இந்த பானங்களில் சர்க்கரை, கலோரிகள் அதிகமாகவும், ஊட்டச்சத்துக்கள் இன்றியும் சில பிராண்டுகள் வைட்டமின்களும், எலக்ட்ரோலைட்டுகளும் கொண்டுனவாக இருந்தாலும், அதிகளவு சர்க்கரை மற்றும் செயற்கை ப்ளேவர்கள் இருப்பதால், இம்மாதிரியான பானங்களை அருந்துவதால் சக்கரை நோய் ஏற்பட ஏதுவாகின்றது.

மது

பொதுவாக மது பானங்கள் உடலில் வறட்சியை ஏற்படுத்தும். இதை உடற்பயிற்சிக்கு பின் குடித்தால், உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதற்கு பதிலாக, வறட்சியை உண்டாக்கும். மேலும் மது பானங்களில் வெற்று கலோரிகள் அதிகமாகவும், எவ்வித ஊட்டச்சத்துக்களும் இல்லை. இப்படி வெற்று கலோரிகள் நிறைந்த பானங்களைக் குடித்தால், அது உடலில் கொழுப்புக்களின் அளவைத் தான் அதிகரிக்கும்.

கார்போனேட்டட் பானங்கள்

கார்போனேட்டட் பானங்களை உடற்பயிற்சிக்கு பின் மட்டுமின்றி, எப்போதுமே குடிக்கக்கூடாது. இவ்வகையான பானங்களை அருந்துவதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து சுறுசுறுப்பாக இருப்பது போன்ற உணர்வை தருகிறது. மேலும், எவ்வளவு வேகமாக உடலின் ஆற்றல் அதிகரிக்கிறதோ, அதே வேகத்தில் உடலின் ஆற்றல் சட்டென்று குறையும். எனவே இம்மாதிரியான பானங்களை தவிர்க்க வேண்டும்.

போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள்

போத்தலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழச்சாறுகள் செயற்கை ப்ளேவர்களைக் கொண்டது. இவ்வகையான இரசாயணம் கலந்த பானங்களை உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதால் இதில் காணப்படும் சுக்ரோஸ் கலவை உடல் பருமனை உண்டாக்கி, மெட்டபாலிச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

காபி

உடற்பயிற்சியின் போது எமது இதயம்,வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் . தொடர்ந்து நாம் காபி குடிப்பதால், இதில் காணப்படும் காப்ஃபைன் காரணமாக இதய மேலும் வேகமாக செயற்பட்டு படபடப்பை உண்டாக்குவதோடு, தூக்க பிரச்சனைகளையும் உண்டாக்கும். மேலும் காபி உடல் வறட்சியையும் ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *