Life Style

காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்ய வேண்டாம்

By  | 

நாம் இரவு முழுவதும் எதையும் உட்கொள்ளாமல் இருப்பதால் இரைப்பை வெறுமையாக இருக்கும். வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் ஒருநாள் முழுவதும் நம் உடல் இயங்கம் இருக்கப் போகிறது. உங்கள் உடல் பிரச்சினைகளுக்கும் இவை காரணமாக இருக்கலாம்

தேனீர் அல்லது கோப்பி குடிப்பீர்களா?


இவற்றில் அமிலதன்மை இருப்பதால் வயிற்றில் அல்சர் போன்ற பிரச்சிணையை உண்டாக்கும்.

பால் அல்லது தயிர் குடிப்பீர்களா?


வயிற்றில் உப்புச்சத்தை அதிகரிக்கச்செய்யும். பாலில் காணப்படும் கல்சியம், புரதம் மற்றும் விட்டமின் பி என்பன செரிமானமடைய அதிக நேரம் எடுப்பதால் செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும். தயிரில் உள்ள பக்டீரியாக்கள் செயற்பாட்டால் வயிறு மந்த நிலையடையும்.

சோடா மற்றும் குளிர்பானங்கள் குடிப்பீர்களா?


இவற்றில் கார்போனேட்ட் அமிலம் அதிகமாக இருப்பதால் அவை இரைபையில் உள்ள அமிலத்துடன் ஒன்று சேர்ந்து வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஆராஞ்சு மற்றும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பீர்களா?


இவ் ஜூஸ் யில் உள்ள விட்டமின் C யானது அமிலச்சுரப்பை அதிகப்படுத்தி குடல் புண்களை ஏற்படுத்தும்.

தக்காளி ஜூஸ் குடிப்பீர்களா?


இதில் உள்ள டேனிக் அமிலம் இறைபையில் சுரக்கும் அமிலத்துடன் சேர்வதால் கரையமுடியாத ஜெல் உருவாக்கப்பட்டு சிறுநீரக கல் உருவாக காரணமாகின்றது.

வாழைப்பழம் சாப்பிடுவீர்களா?


வாழைப்பழம் குறுதியில் உள்ள மெக்னிஷீயத்தை அதிகரிக்கச் செய்கின்றது.இது இதயம் பிரச்சினைகளை உருவாக்கலாம்.

அப்போ என்னதான் குடிக்கலாம்..?

ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரைமணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியை குறைக்கும் தன்மை அதிகம். தண்ணீரானது அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தை சமன்செய்து, வயிற்றை சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு, போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாக குறைக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *