Health

பூசணி விதையில் இவ்வளவு விசயம் இருக்கா?

By  | 

பூசணி விதைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

பூசணி விதைகளில் மக்னீசியம், மாங்கனீசு, காப்பர், புரோட்டீன் மற்றும் ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

பூசணி விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள், உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகவும், உயர் இரத்த அழுத்த பிரச்னையும் இருந்தால், அது இதய நோய்க்கு வழிவகுப்பதோடு, பக்கவாதத்தின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

ஆகவே, தினமும் தவறாமல் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

பூசணி விதைகள் க்ளுக்கோஸ் அளவைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரித்து, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால், தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடுங்கள்.

பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. இந்த விதைகளில் உள்ள பாஸ்பரஸ், உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவியாக இருக்கும். எனவே எடையைக் குறைக்க பூசணி விதைகளை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வாருங்கள்.

பூசணி விதைகளில் ஏராளமான அளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த விதைகளை ஆர்த்ரிடிஸ் பிரச்னை உள்ள ஒருவர் உட்கொண்டு வந்தால், அது ஆர்த்ரிடிஸ் வலியைக் குறைப்பதோடு, ஆர்த்ரிடிஸ் பிரச்னையில் இருந்து முற்றிலும் விடுவிக்கும்.

அதோடு இந்த விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை மூட்டுக்களின் இயக்கத்தை மேம்படுத்தி, மூட்டுக்களின் அசைவில் உள்ள பிரச்னையை சரிசெய்யும்.

முதுமைக் காலத்தில் கனிமச்சத்துக்கள் குறைபாட்டினால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஏற்படுவது தான் ஆஸ்டியோபோரோசிஸ். பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

மனநிலை பிரச்னைகள் பூசணி விதைகள் ஒருவரது மனநிலையை மேம்படுத்தி, மன இறுக்கத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள் தான். இந்த பைட்டோ-கெமிக்கல், ட்ரிப்டோஃபேனை செரடோனினான மாற்றி, மன இறுக்கம், மன அழுத்தம் போன்ற மனநல பிரச்னைகளில் இருந்து விடுவிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *