Health

மழைக்கால தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு

By  | 

மழை காலத்தை தொடர்ந்து நாம் முகம் கொடுக்கும் பிரச்சினை தொற்று நோய்கள். தொற்று நோய்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ளு வதன்மூலம் நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.

  • முறைப்படி சவர்க்காரம் கொண்டு கைகளைக் கழுவுதல் வேண்டும். குறிப்பாக உணவு சமைக்க முன்னரும், உட்கொள்ள முன்னரும், மலசல கூடத்திற்கு சென்ற பின்னரும் இருமல் தும்மலின் பின்னரும் இதை பின்பற்ற வேண்டும்.  வெளியே சென்று வீடு திரும்பியவுடன் கைகளைக் கழுவிய பின்னரே குழந்தைகளை தூக்கவும் பராமரிக்கவும் வேண்டும்.
  • இருமும் போதும் தும்மும் போதும் திசுத்தாள்களை (Tissues) பாவிப்பதுடன் அவற்றைப் பாதுகாப்பாக குப்பைத் தொட்டியில் போடவேண்டும். கைக்குட்டை பாவிப்பதாயின் அதை கழுவிப் பாவிக்க வேண்டும்.
  • இயன்றவரை குழந்தைகளை இருமல் தடிமல் உள்ளோர் பாராமரிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிடின் வாயையையும் மூக்கையும் மூடக்கூடியவாறு முகமூடி (Mask) அல்லது கைக்குட்டையை பாவிக்கலாம்.
  • வீட்டிலுள்ள ஒருவருக்கு தொற்றுநோய் ஒன்று ஏற்படின் அவர் பாவிக்கும் துவாய், சவர்க்காரம், பாத்திரங்களை மற்றோர் பாவிக்க கூடாது. குறிப்பாக குழந்தைகளுக்கு தனியான பொருட்களை வைத்துக்கொள்வது நல்லது.
  • வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டுச் சுழலில் நீர்தேங்கக்கூடிய சிரட்டைகள், யோகட் கோப்பைகள், வெற்று ரின்கள், போத்தல்கள், குரும்பைகள், ரயர்கள், போன்ற நுளம்பு பெருகக் கூடிய பொருட்களை அகற்றி சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • நுளம்பு கடியிலிருந்து பாதுகாக்க நுளம்பு வலை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
  • கொதித்தாறிய நீரைப் பருகுவதுடன், குளோரினிடப்பட்ட கிணற்று நீரையே பாவிக்க வேண்டும்.
  • மழைகாலங்களில் ஈக்கள், அதிகமாக பரவுவதால் கழிவுகளை முறைப்படி அகற்ற வேண்டும். ஈமொய்க்காதவாறு உணவுப் பொருட்களைக் மூடிவைக்க வேண்டும்.
  • குழந்தைகளின் மலசலங்களை மலசலகூடத்தில் இட்டு அகற்ற வேண்டும் அல்லது முறைப்படி அவற்றை குழியிட்டு புதைத்தோ எரித்தோ விடவேண்டும்.
  • இயன்றவரை குழந்தைகளை சனநெருக்கடியான இடங்களுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் நோயுற்றவர்கள் நோய் சுகமாகும் வரை பாடசாலைக்கோ, அல்லது வேலைக்கோ செல்வதை தவிர்ப்பதுடன் தகுந்த சிகிச்சையையும் பெறவேண்டும். இதன் மூலம் மற்றோருக்கும் நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *