Cinema

‘காலா’ வின் திரை நிமிடங்கள்

By  | 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜூன் 7 ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ள திரைப்படம் ‘காலா’ . இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. சமீபத்திய அறிக்கையின்படி, ‘காலா’வின் கால அளவு 166 நிமிடங்கள் , இது 2 மணித்தியாலங்கள் மற்றும் 46 நிமிடங்கள் வரை திரையிடப்படும்.

‘காலா’ கடந்த மாதம் CBFC வாரியத்தால் ‘யு / ஏ’ சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. உண்மையில், இந்த திரைப்படம் ஏப்ரல் 27 அன்று வெளியிடப்பட வேண்டும். மார்ச் மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்ட கோலிவுட் வேலைநிறுத்தம் காரணமாக இந்த வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

ரஞ்சித் இயக்கியக்கத்தில் ‘காலா’ வில் ரஜினிகாந்த் நடிக்கிறார், நடிகர் நனா படேகர் பிரதான எதிரியாக நடித்திருப்பார் என்று கூறப்படுகிறது. இத் திரைப்படத்தை விண்டேர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஹூமா குரேஷி, நானா படேகர், ஈஸ்வர ராவ், சமுத்திரகணி மற்றும் அஞ்சலி பாட்டீல் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *