Cookery

மட்டன் கப்ஸா செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • மட்டன் – கால் கிலோ
  • பாசுமதி அரிசி – கால் கிலோ
  • வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – 100 கிராம்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – கால் – அரை டீஸ்பூன்
  • கரம் மசாலா – கால் டீஸ்பூன்
  • முழுமிளகு – கால் டீஸ்பூன்
  • காய்ந்த எலுமிச்சை – 1
  • ஏலக்காய் – 2
  • கிராம்பு – 2
  • பட்டை – சிறிய துண்டு
  • பிரியாணி இலை-1
  • குங்குமப்பூ – 1 சிட்டிகை
  • நெய் அல்லது வெண்ணெய் – 50 கிராம்
  • உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவுசெய்முறை

    மட்டனை முதலில் சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும். மட்டன் துண்டுகளுடன் மிளகாய்த்தூள், தயிர், உப்பு சேர்த்துப் ஊற வைக்கவும்.

    அரிசியையும் 10 நிமிடம் ஊறவைக்கவும். வெங்காயத்தை நறுக்கியும், தக்காளியை பேஸ்ட் செய்தும் வைக்கவும்.

    குக்கரில் ஊறவைத்த மட்டன், இரண்டரை கப் தண்ணீர், காய்ந்த எலுமிச்சை, மிளகு, ஏலம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நான்கு விசில் வைத்து இறக்கவும்.

    கப்ஸா செய்யும் பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

    நறுக்கிய வெங்காயத்தை வதக்கியபின், இஞ்சி பூண்டு பேஸ்டுடன் கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து வதக்கவும்.

    அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு பிரட்டிவிடவும். அதன்பின் ஊறிய அரிசி சேர்த்து பக்குவமாக மசாலா, அரிசியில் சேரும்படி பிரட்டி விடவும்.

    அதனுடன் வேகவைத்த மட்டனை சூட்டுடனே மட்டனில் இருக்கும் தண்ணீருடன் ஊற்றி வேகவைக்கவும். அரிசி வெந்து மேல் வரும்பொழுது அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    மூடியிட்டு 10 நிமிடம் வரை வைக்கவும். பின்னர், சோறு உடையாதவாறு பிரட்டி பரிமாறவும். பரிமாறும் முன்பு காய்ந்த எலுமிச்சையை எடுத்து விடவும். வறுத்த முந்திரி மற்றும் திராட்சை தூவி அலங்கரிக்கலாம்.

    கப்ஸா காரம் இல்லாமல் இருக்கும் என்பதால் விரும்பினால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.

    மட்டன் கப்ஸா (பிரியாணி )ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *