Cookery

நோன்பு ஸ்பெஷல்: சின்ன வெங்காயம் நாட்டுக்கோழி கட்லெட் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • எலும்பில்லாத நாட்டுக்கோழி  – 200 கிராம்
  • சாண்ட்விச் பிரட் துண்டுகள் – 6
  • சின்ன வெங்காயம் – 5
  • பச்சைமிளகாய் – 2
  • மல்லி இலை – சிறிதளவு
  • மிளகாய்தூள் -1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் -1 டீஸ்பூன்
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

ப்ரட்டை தூளாக உதிர்த்துக் கொள்ள வேண்டும்.

கோழிக்கறியை உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வேக வைத்து பொடியாக கொத்திக் கொள்ளவும்.

பிரட், கோழிக்கறி, இவற்றுடன் வெங்காயம், பச்சைமிளகாய், மல்லி இலை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு வடைக்கு அரைப்பது போல் கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இதனை வேண்டிய வடிவில் கட்லட் போல செய்து எண்ணெயிலிட்டுப் பொரித்து எடுக்கவும். எண்ணெய் அதிகம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் தோசை தவாவில் போட்டு, கட்லட்டைச் சுற்றி மட்டும் சிறிது எண்ணெய்விட்டு பொரித்து எடுக்கவும். தேவைப்பட்டால் கட்லெட் சூடாக இருக்கும்போது அதன்மேல் சிறிது வறுத்த எள் சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான சின்ன வெங்காயம் நாட்டுக்கோழி  கட்லெட் ரெடி. தக்காளி சாஸ், சட்னி ஆகியவையோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *