Life Style

இல்வாழ்வில் முதல் நாளில் முக்கிய இடம் “பாயிற்கே“!

By  | 

புத்துணர்ச்சியை தரும் இயற்கை பாய்

மருத்துவ குணமுள்ள பாய்களில் படுத்தால் மனம் மட்டுமின்றி உடலும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

வகைகள் : பாய்களில் கோரைப் பாய்,பிரம்பு பாய்,ஈச்சம் பாய்,மூங்கில் பாய்,தாழம் பாய்,பேரிச்சம் பாய்,நாணல் கோரைப் பாய் என பல வகைகள் இருக்கின்றன. இது போன்ற இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பாயில் படுப்பதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்

கோரைப் பாய் : கோரைப்பாயில் தூங்கினால் உடல் சூடு போக்கி குளர்ச்சியை தரும். அதே போல பிரம்பு பாயில் படுத்தால் சீதபேதி நலம் பெறும்.

ஈச்சம் பாய் : ஈச்சம் பாயில் தொடர்ந்து படுத்து தூங்கினால் வாதம் மற்றும் அது தொடர்பான நோய்கள் குணமாக. ஆனால் இது உடல் சூட்டை அதிகப்படுத்தி கபத்தை அதிகரிக்கும் என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

மூங்கில் பாய் : மூங்கில் பாய் என்பது மூங்கில் கழிகளை லேசான குச்சிகளாக அறுத்துக் கொள்வர். இதில் படுத்தால் உடல் சூடு அதிகரிக்கும் என்பதல பெரும்பாலானோர் தூங்குவதற்கு பயன்படுத்த மாட்டார்கள். மாறாக அதிக வெளிச்சத்தை மறைக்க, அலங்காரத்திற்கு என இதனை பயனப்படுத்துவதுண்டு.

பனையோலை பாய் : இதில் படுத்தால் பித்தத்தை போக்கி உடல் சூட்டை குறைத்திடும். அதே போல தென்னம் ஓலையில் செய்யப்பட்ட பாயில் படுத்தால் உடலின் தட்பவெட்பத்தை சமன் செய்திடும்.

முதலிரவு : முதலிரவின் போது படுக்கையில் நிறைய பூக்களை தூவுவது வழக்கம். இது வெற்று அலங்காரத்திற்காக அல்ல. ஆரம்ப காலங்களில் மன்னர்களின் படுக்கையறை இப்படியான மலர்களால் உருவாக்கப்பட்ட படுக்கையாகவே இருந்தது. இப்படி பூக்கள் நிறைந்த படுக்கையில் தூங்குவதால் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்!

கர்ப்பிணிகள் : இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இது போன்ற பாய்களில் படுத்தால் மூட்டு,முதுகு,தசை தொடர்பான நோய்கள் வராமல் தவிர்க்கலாம். உடலின் ரத்த ஓட்டம் சீராகும். கர்ப்பிணிகள் படுத்தால் அவர்களின் இடுப்பு எலும்பு விரிவடையும். இதனால் சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *