Love

பேசாமல் பேசுகின்றேன்…

By  | 

நீ என்னோடு பேசுவாய் என நானும்
நான் உன்னோடு பேசுவேன் என நீயும்
நினைத்து பேசாமலே போன அந்த நாட்களை
பற்றி இதுவரை நான் எவரிடமும் பேசியதில்லை

நீ பேச முயற்சிப்பதையே நானும் பேச
போகிறேன் என்பதை என்னால்
நன்றாகவே உணர முடிந்தாலும் – அதை
உறுதி படுத்தி கொள்ள வேண்டும் என்றால்
ஒரு முறையாவது பேச வேண்டுமே

இருந்தாலும் இருவரும் எதுவுமே
பேசாமல் பேசாமல் போவதால்
சந்தர்ப்பம் கிடைக்கும் போது
எல்லாவற்றையும் மொத்தமாக சேர்த்து
நிறைய பேசலாம் என நினைத்திருந்தேன்

பேசுவதற்கான வார்தைகளை தயார்
படுத்திக் கொண்டு உன்னை பின்
தொடரும் போதெல்லாம் நீ திரும்பி
பார்ப்பதற்குள்ளேயே பெரும்பாலும்
அந்த பயணமே முடிந்துவிடும்.

மனப்பாடம் செய்து வைத்த சொற்கள்
மறந்து போய் விட்டதென்றாலும்
இனி உன்னை சந்திக்க நேரும்
இடத்திலேயே கட்டாயமாக ஏதாவது
பேசலாம் எனும் முடிவில் இருந்தேன்.

நான் பேச நினைத்தவற்றை யாரோ
உன்னிடம் பேசி விட்டார்களோ
தெரியவில்லை – இப்போது உன்னை
பார்க்கும் போது எல்லாம் நீ தொலைபேசியில்
ஏதோ பேசிக் கொண்டே இருக்கிறாய்.

இனி உன்னிடம் நான் என்ன
பேசுவது – ஆனாலும் நீ என்னை
நிறைய நிறைய பேச வைத்துக்கொண்டிருக்கிறாய்
தனிமையோடு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *