Life Style

மழைக்கால ஸ்மார்ட்போன் பாதுகாப்பு

By  | 

நீங்கள் நீண்ட சேமித்து வாங்கிய உங்கள் ஸ்மார்ட்போனை இந்த மழை காலத்தில் பயன்படுத்துவதில் பல தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டியிருக்கும்.
உங்கள் ஸ்மார்ட்போனை அதன் பாதுகாப்புக்கருதி நீங்கள் வீட்டிலேயே வவிட்டுச்செல்லலாம், ஆனால் உங்கள் ஸ்மார்ட்ஃபோன் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான பயண கருவியாகும். நீங்கள் அறிமுகமில்லாத இடங்களைத் தொடரவும், சாப்பிட வேண்டிய இடங்களை கண்டுபிடிக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் மற்றும் தகவல்களை பரிமாரவும் தேவைப்படும்.
எனவே நீங்கள் நீண்ட பயணமோ அல்லது வெளியில் செல்லும் போதோ பின்பற்றவேண்டிய சில விடயங்கள்.

power sever
உங்கள் ஸ்மார்ட்போனை ஜாச் செய்ய power sever ஒன்றையும் மற்றும் இரண்டு பேட்டரிகளையும் உடன் வைத்துக்கொள்ளுங்கள்.

கேபிள்கள்
குறைந்தபட்சம் மூன்று கேபிள்கள்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தொலைபேசிக்கான இரண்டு கேபிள்களை உங்களுடனும் நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஒரு கேபிளை வைத்துகொள்ளுங்கள்.

வாட்டர் ப்ரூப் மொபைல் கவர்கள்:
தண்ணீர் புகாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன இந்த கவர்கள். ப்ளாஸ்டிக் மற்றும் சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கவர்கள் மழைக்காலத்தில் சிறந்த பாதுகாப்பு.

ப்ளூடூத் ஹெட்செட்:
மொபைல் போன்களை கையிலோ அல்லது பாக்கெட்டிலோ வைத்திருக்கும்போது அது மழையில் நனைந்து வீணாக வாய்ப்புள்ளது. உங்கள் ஸ்மார்ட்போன்களை ப்ளூடூத் மூலம் ப்ளூடூத் ஹெட் செட்டுடன் இணைத்துவிட்டால் அழைப்புகளை தவரவிடாமலும், அதே சமயம் கேட்ஜெட்டுகளை பாதுக்காப்பாகவும் பயன்படுத்த முடியும்.இதே வேளை ப்ளூடூத் ஹெட்செட்களை மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *