Cookery

சிக்கன் தர்பாரி செய்முறை

By  | 

தேவையான பொருட்கள்

  • கோழி – 500g
  • தக்காளி – 2
  • கொண்டைக்கடலை – 100 கிராம்
  • முந்திரி – 10
  • தேங்காய் துருவல் – ஒரு மூடி
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • இஞ்சி – ஒரு துண்டு
  • பூண்டு – 5
  • காய்ந்த மிளகாய் – 4
  • கிராம்பு – 4
  • பட்டை – 2 அங்குலத் துண்டு
  • ஏலக்காய் – 6
  • மல்லி – ஒரு மேசைக்கரண்டி
  • கசகசா – அரை மேசைக்கரண்டி
  • நெய் – 3 மேசைக்கரண்டி
  • வெங்காயம் – 2 (சிறியது)
  • மஞ்சள் தூள் – அரைத் தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் – அரைத் தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

ஒரு கப் அளவிற்கு புளியைக் கரைத்து வடிகட்டி புளிக்கரைசலை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கப் தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.

இஞ்சி, பூண்டினை , காய்ந்த மிளகாய் மூன்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
முந்திரியைத் தனியாக அரைத்து வைக்கவும்.

கிராம்பு, பட்டை, ஏலக்காய், மல்லி, கசகசா ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

கொண்டைக்கடலையை 3 – 4 மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்து மசித்துக் கொள்ளவும்
வாணலியில் நெய் விட்டு சூடேறியதும், வெட்டிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வதங்கியதும் இஞ்சி, பூண்டு, மிளகாய் விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

பின் கோழித் துண்டுகளைச் சேர்த்து, குறைந்த தீயில் வைத்து கோழியில் உள்ள நீர் வற்றும் வரை வேகவிடவும்.

அதனுடன் தக்காளி மற்றும் பொடி செய்து வைத்துள்ள கிராம்பு, ஏலக்காய், மல்லி மசாலாவைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, தீயை சற்று அதிகப்படுத்தி வேகவிடவும்.

மசாலா தக்காளியுடன் நன்கு கலந்து, சிக்கன் வெந்ததும் மசித்து வைத்துள்ள கொண்டைக்கடலை, முந்திரி விழுது மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் வேகவிடவும்.

இறுதியாக புளிக் கரைசலை ஊற்றி, குழம்பு நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான சிக்கன் தர்பாரி தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *