Life Style

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஃபிட்னஸ் டிப்ஸ்

By  | 

வேலைக்குச்செல்லும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் உடல்நலத்தைப் பற்றி அதிகம் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு வீட்டில் உள்ள வேலைகளைச் செய்வதற்கும் அலுவலக வேலைகளைச் செய்வதற்குமே நேரம் போய்விடுகிறது. பரபரப்பான நாட்களிலும் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள உதவும் சில குறிப்புகளை இங்கு காணலாம்.

காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்

இரவு முழுதும் சாப்பிடாமல் இருந்துவிட்டு, நாம் முதலில் சாப்பிடும் உணவு காலை உணவுதான். அது அந்த நாளுக்கான ஆற்றலை உங்களுக்கு அளிக்கிறது. முழு தானியங்கள், பால் பொருள்கள், புரதங்கள், பழங்கள் ஆகியவை உள்ளடங்கிய ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

சுறுசுறுப்பு

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சிக்கவும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் சூழல் உள்ளவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து ஒரு சுற்று நடந்துவிட்டு வரலாம். ஃபோன் பேசும்போது நடந்துகொண்டே பேசலாம், மதிய உணவிற்குப் பிறகு சிறிது தூரம் நடந்துவிட்டு பணியை தொடரலாம்.

ஆரோக்கியமான தின்பண்டங்கள்

அவ்வபோது சிறு சிறு அளவில் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது, நாள் முழுதும் உங்களை ஆற்றலுடன் வைத்திருக்க உதவும். அதுமட்டுமின்றி ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற உந்துதலையும் அது தணிக்க உதவும். ஆகவே, அலுவலகத்திலும் வீட்டிலும் ஆரோக்கியமான நொறுக்குத்தீனி வகைகளை வாங்கி வைத்துக்கொள்ளலாம். நட்ஸ், வேர்க்கடலை, உலர் பழங்கள் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

உடற்பயிற்சி

தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்கள் வசதிக்கேற்ப உடற்பயிற்சி நேரத்தைப் பிரித்துத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். காலையில் ரன்னிங் ஓடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *