Cookery

ரமழான் ஸ்பெஷல்: பிரட் சமோசா செய்முறை!

By  | 

தேவையான பொருள்கள் 

  • பாண்  துண்டுகள்  – 4
  • கடலை மாவு  – 1/2 கப்
  • அரிசி மாவு  – 1/4 கப்
  • மிளகாய் தூள்  – 1 மேஜைக்கரண்டி
  • சோடா உப்பு  – 1/4 தேக்கரண்டி
  • பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • முட்டை

செய்முறை 

பாண் துண்டுகளை  முக்கோண வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு நன்றாக கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.

பாண் துயண்டுகளுக்கு இடையில் கறியை வைத்து நிரப்பி முட்டை வெள்ளைகருவை பூசி ஒட்டிக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நிரப்பி வைத்துள்ள  பாண் துண்டுகளை கரைத்து வைத்திருக்கும் மாவில் முக்கி எடுத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்துக்கொள்ளவும்.

சுவையான பிரட் சமோசா ரெடி.

குறிப்பு – சமோசாவிற்கு போன்று விரும்பிய கறியை தயார் செய்து கொள்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *