Cinema

உங்களுக்கு பாட்மான் பற்றி தெரியுமா?

By  | 

மாதவிலக்கு நேரங்களில் தமிழக ஏழைப் பெண்கள் குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் மெஷின் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனைப் புரிந்தவர் தமிழர் அருணாச்சலம் முருகானந்தம். இவரின் சாதனையைப் பாராட்டிய மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது கொடுத்து கெளரவித்தது. விருதுக்குப் பின்னரே அவர் இந்தியாவின் கவனிப்பைப் பெற்றார். ஊடக கவனிப்பும் அப்போதுதான் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக ‘பாட்மான்’ எனும் பெயரில் திரைப்படமாக பாலிவுட்டில் உருவாகிய கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், பத்மாவதி வெளியானதன் காரணமாக சற்று பின்தள்ளி பிப்ரவரி மாதம் வெளியானது.

இதில், அக்ஷய குமார் நடித்துள்ளார். நாடு முழுவதும் பல பிரபலங்கள் நாப்கின்னுடன் போஸ் கொடுத்து, தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தனது மனைவி மாதவிடாய் சமயத்தில்பழைய துணிகள் மற்றும் பத்திரிகைத்தாள்களை உபயோகிப்பதை கண்டு மனவருந்தி குறைந்த செலவிலான சானிட்டரி பாட்டைகண்டுபிடித்து இந்தியா முழுதும் உற்பத்தி செய்ய வழிவகுத்த அவரது சுவாரஸ்யமான கதையே அத்திரைப்படம் ஆகும்.

இந்ததிரைப்படம் பால்நிலை குறித்த சமூகத்தின் கருத்தியல் மற்றும் மாதவிடாய் குறித்த சமூகத்தின் தவறான எண்ணப்போக்குகள் ஆகியமுக்கியமான பகுதிகளைப்பற்றி பேசுகிறது.

மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதன் அவசியத்தை அடையாளம் கண்டும், அது தொடர்பான தவறானஎண்ணப்போக்குகளை மக்கள் மத்தியில் இருந்து நீக்கவும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்(UNFPA) இலங்கையானது, அதன்சமூக வலைத்தளங்களில் ஒரு வினாவிடைப்போட்டியை நாடத்தியது.

அதன் வெற்றியாளர்கள் பாலிவூட் திரைப்படமான “பாட்மான்”28 மே 2018 அன்றைய சிறப்புக்காட்சிக்கு டிக்கட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *