Cinema

விஜய் அவார்ட்ஸ் விரைவில்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By  | 

சின்னத்திரையில் பிரபல முன்னணி டிவி சேனலாக இருந்து வருகிறது ஸ்டார் விஜய். இந்த சேனல் ஒவ்வொரு வருடமும் விஜய் அவார்ட்ஸ் என்ற விருது விழா மூலம் திரையுலக கலைஞர்களை பெருமைப்படுத்தி வருகிறது.

இந்த வருடம் 10-வது வருட விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை நடந்த உள்ளது. தற்போது அந்த நிகழ்ச்சி எங்கு எப்போது நடக்க போகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆம், வரும் ஜூன் 3 ஆம் திகதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜய், ரஜினி, கமல், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவின் தொகுப்பாளராக விஜய் டிவியில் பணிபுரிந்து வரும் நீயா நானா போபிநாத் டிடி எனப்படும் தில்யதர்ஷினி மற்றும் மா கா பா ஆனந்த் ஆகியோர் தொகுப்பாளர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *