Cookery

மாம்பழ அல்வா – செ‌ய்முறை!

By  | 

 

தேவையான பொருட்கள்

  • மா‌ம்பழ‌ம் – 2
  • சர்க்கரை – 1 கப்
  • பால் – 2 கப்
  • ஏல‌க்கா‌ய் – 2
  • நெய் – தேவையான அளவு
  • முந்திரி – 5

செ‌ய்முறை :

மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்கி துண்டுகளாக‌்கி அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.

ஒரு கடாய் எடுத்து அதில் ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளற வேண்டும்.

அடிக்கடி நெய் சேர்த்து கிளரினால் கலவை நன்கு ஒட்டாமல் வரும் போது ஏல‌க்கா‌யை ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து சே‌ர்‌க்கவு‌ம்.

பா‌த்‌திர‌த்‌தி‌ல் தளதளவெ‌ன்று அ‌‌ல்வா வ‌ந்தது‌ம், ‌வறுத்த முந்திரியை சேர்த்து சி‌றிது நெய் தடவிய த‌ட்டு அ‌ல்லது ‌‌‌ட்ரே‌யி‌ல் அ‌ல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

சூப்பரான மா‌ம்பழ அ‌ல்வா தயா‌ர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *