Cinema

புதிய விஸ்வரூபவம் எடுத்த பிக்பாஸ் ஜூலி; படம் உள்ளே….!

By  | 

பிக் பாஸ் நிகழ்ச்சியினூடாக பிரபலமான ஜூலியானா மக்களின் எதிர்ப்பை அதிகம் சம்பாதித்தவர். இவரை ரசிகர்கள் சமூக வளைத்தளங்களில் கலாய்த்து பேசாமல் இருந்த நாளே கிடையாது. அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டில் அவருடைய நடத்தை இருந்தது.

பின் பல பட வாய்புக்கள் கிடைத்த நிலையில் அவ்வப்போது விளம்பரங்களிலும் நடித்து வருவார். மற்றும் ஃபேஸ்புக்கினூடாக நேரலையாகவும் வீடியோவாகவும் அவருடைய கருத்துக்களை தெரிவிப்பார். அதை கலாய்த்து ரசிகர்கள் பல மீம்ஸ்களையும் வெளியிடுவர்.

அந்த வகையில் படவாய்ப்புக்கள் கிடைத்த நிலையில் தற்போது அம்மன் வேடத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகின்றது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி’ என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்’ புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் செய்கிறார்கள். மகேஸ்வரன்-சந்திரஹாசன் என்பவர்கள் படத்தின் இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *