Cookery

லுக்மி செய்முறை

By  | 

தேவையான பொருட்கள்:

பூரணம் செய்ய:

  • இறைச்சி – 250g
  • வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
  • இஞ்சி – பூண்டு விழுது – அரை டேபிள்ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
  • எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
  • நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

லுக்மி செய்ய:

  • மைதா மாவு – ஒரு கப்
  • கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
  • ரவை – 3 டேபிள்ஸ்பூன்
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

இறைச்சி துண்டுகளை உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துப் பிசறி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் ஊறவைத்த இறைச்சியை சேர்த்துக் கிளறி பத்து நிமிடங்கள் வேகவிடவும்.

இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். ஆறிய பின் கறி கலவையுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

பாத்திரத்தில் மைதா மாவுடன், கோதுமை மாவு, உப்பு, ரவை, எண்ணெய் சேர்த்துக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மிருதுவாகப் பிசையவும். மாவை மூடி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

பிறகு, மீண்டும் 5 நிமிடங்கள் இந்த மாவை நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி மைதா மாவு தூவி, சப்பாத்திகளாகத் தேய்க்கவும், இதை நீளவாக்கில் மூன்று துண்டுகளாக்கவும்.

ஒவ்வொரு சப்பாத்தி துண்டின் மீதும் ஒரு டேபிள்ஸ்பூன் இறைச்சி கலவையை வைத்து இரு ஓரங்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக முக்கோண வடிவத்துக்கு மூடவும். பூரணம் வெளியே வராதபடி ஒரங்களை நன்றாக அழுத்திவிடவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி லுக்மிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தயிர், தக்காளி, சாஸ், புதினா சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *