Life Style

சுற்று சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு !

By  | 

சுற்று சூழல் பாதுகாப்பில் பெண்களாகிய நம் பங்கு இன்றி அமையததாகும். நிலம், நீர், காற்று ஆகிய மூன்று வழிகளிலும் நாம் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு சூழல் மாசடைவதற்கு ஏதுவாகின்றது. ஒரு பெண் என்ற வகையில் நாம் சூழல் பாதுகாப்பை நமது வீடுகளில் இருந்து தொடங்கவேண்டும். சூழல் மாசு ஏற்படுத்தக்கூடிய பொருட்களுக்கு மாற்றீடான பொருட்களை பயன்படுத்த பழகிக்கொள்வதுடன் நமது குடுபத்தில் உள்ளவர்களையும் இதற்கு பழக்கப்படுத்துவதன் மூலம் எமது உலகை காபாற்ற எமது பங்களிப்பை வழங்கலாம்.

நீங்கள் உங்கள் மேற்கொள்ளக் கூடிய சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் சில …

இன்று நாம் சாதாரண மலிகைகடைகளை கடந்து சுப்பர் மார்கட் டுகளுக்கு முன்னேரியுள்ளோம், இங்கு கொள்வனவு செய்யும் அனேகபொருட்கள் பொலிதீன் பைகளில் அடைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மறுசுழற்சிக்கு உட்படுத்த கூடிய பொலிதீன்பைகளில் பொதி செய்த பொருட்களை வாங்குவதற்கு பழகிகொள்ளுங்கள்.

நாம் சிறு தேவைகளுக்காக கடைகளுக்கு செல்லும் போது ஒரு துணி பையை கொண்டு செல்வதன் மூல் நம் வீடுகளில் சேறுகின்ற பொலிதீன் உறைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கலாம், அத்துடன் அதற்காக செலவு செய்யும் பணத்தையும் சேமிக்கலாம்.

நாம் வெளியில் செல்லும் போது ஒரு தணிணீர் போத்தலை நம் பயணப்பையில் கொண்டு குடிநீர்போத்தல்களை வாங்கவேண்டிய தேவை ஏற்படாது. அத்துடன் நாம் உணவை பொதிசெய்ய பயன்படுத்தும் பொலிதீன்களுக்கு பதிலாக டிபன்பாக்ஸ்களை பயன்படுத்தலாம்.

நமது வீடுகளில் சேருகின்ற குப்பைகளை உரியமுறையில் பிரித்து சேகரிப்பவர்களுக்கு கையளிக்கவேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *