Cookery

உருளைக்கிழங்கு புட்டு செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
  • வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 3
  • கறிவேப்பில்லை – 5 இலை
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • கடுகு – தாளிக்க
  • உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • உப்பு – 1 தேக்கரண்டி

செய்முறை

  • உருளைக்கிழங்கினை வேகவைத்து தோல் உரித்து வைக்கவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லையை மிகவும் பொடிதாக வெட்டி கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.
  • பின்னர் உளுத்தம் பருப்பினை வதக்கவும்.
  • அதன் பின் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  • அதன் பின் மஞ்சள் தூள் சேர்த்து உருளைக்கிழங்கினை நன்றாக கையினால் மசித்து அதில் சேர்க்கவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம்)
  • அனைத்தும் நன்றாக சேர்த்து கிளறவும். மிதமான தீயில் 2 -3 நிமிடம் வதக்கவும்.
  • இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு புட்டு ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *